குவைத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலையில் திருப்பம் : சிக்கிய ஆந்திர மாநில ஓட்டுநர்.. ஆட்சியரிடம் ஓட்டுநரின் மனைவி கண்ணீர் மனு!!

Author: Udayachandran RadhaKrishnan
13 March 2022, 6:47 pm
kuwait Murder -Updatenews360
Quick Share

ஆந்திரா : குவைத்தில் நடைபெற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலையில் ஆந்திராவை சேர்ந்த டிரைவர் குவைத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடப்பா மாவட்டம் லக்கிரெட்டி பள்ளியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வெங்கடேஷ். 2018 ஆம் ஆண்டு குவைத் சென்ற அவர் அங்கு முகமது என்பவரிடம் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு தன்னுடைய மனைவி சுவாதியை குவைத் வரவழைத்த வெங்கடேஷ் அங்கு வேறொரு வீட்டில் சுவாதியை பணியமர்த்தினார். இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வெங்கடேஷ் வேலை செய்த வீட்டின் உரிமையாளர் முகமது, அவருடைய மனைவி, மகள் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த வைத்து போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர். பின்னர் சுவாதியையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று 6 நாட்கள் கொடுமையான விசாரணைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுவாதி வேலை செய்த வீட்டு உரிமையாளரான வக்கீல் அவரை காவல் நிலையத்தில் இருந்து விடுவித்து இந்தியாவுக்கு அனுப்பி விட்டார். நாடு திரும்பிய சுவாதி தங்களுக்கும் 3பேர் கொலைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறுகிறார்.

மேலும் கொலை செய்யப்பட்ட முகமதுவின் மனைவி தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் பெண்ணிற்கு பதிலாக வேறு ஒரு பெண்ணை பணியமர்த்த வேண்டும் என்று கணவரிடம் அடிக்கடி கேட்டு வந்தார்.

இந்நிலையில் அவர்கள் 3 பேரும் கொலை செய்யப்பட்டனர். எனவே நாங்கள் தான் கொலைசெய்து விட்டோம் என்று கருதி எங்களை போலீசார் கைது செய்தனர். நான் வேலை செய்த வீட்டின் உரிமையாளரின் முயற்சி காரணமாக என்னை போலீசார் காவல் நிலையத்தில் இருந்து விடுவித்தனர்.

என்னுடைய கணவரையும் விடுவிக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கடப்பா மாவட்ட ஆட்சியரிடம் கோரி சுவாதி மனு அளித்துள்ளார்.

Views: - 820

0

0