ட்விட்டர் இந்திய தலைவர் மணீஷ் மகேஸ்வரி பணியிட மாற்றம்

Author: kavin kumar
13 August 2021, 10:33 pm
Quick Share

ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய தலைவர் மணீஷ் மகேஸ்வரி பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 1-ம் தேதி தலித் சமூகத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ட்விட்டரில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.இதனால், தேசிய குழந்தைகள் நல ஆணையம் ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர், காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தி மற்றும் அக்கட்சி தலைவர்கள் சிலரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே தங்களின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலைவர் மணீஷ் மகேஸ்வரி அமெரிக்காவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் அமெரிக்காவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்தில் வருவாய் வியூகம் மற்றும் செயல்பாடுகள் பிரிவின் மூத்த இயக்குனராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 228

0

0