பிச்சை எடுப்பது போல நடித்து இரண்டரை லட்சம் கொள்ளை! பரபரப்பு சிசிடிவி காட்சி!!

13 November 2020, 3:21 pm
Money Theft - Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி நகரில் பிச்சை எடுப்பதுபோல் கடைக்குள் சென்று சிறுமியை வைத்து இரண்டரை லட்சம் ரூபாயை கொள்ளையடித்த பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி நகரிலுள்ள லீலா மஹால் சந்திப்பு அருகே உள்ள ஸ்டீல்& சிமெண்ட் கடையில் பிச்சை கேட்பது போல் நேற்று முன்தினம் மதியம் 3 பெண்கள் ஒரு சிறுமி சென்றுள்ளனர். அப்போது கடை உரிமையாளர் செல்போனை பார்த்துக்கொண்டே இவர்களுக்கு தானம் அளித்துள்ளார்.

இதனைப் பயன்படுத்தி குடிதண்ணீர் வேண்டுமென கேட்டுள்ளார். அதற்குள்ளாக மூன்று பெண்களும் உரிமையாளரை சுற்றி நின்று கொள்ள சிறுமி மெதுவாக கல்லா இருக்கும் மேஜை அருகே சென்று உள்ளே நுழைந்து கல்லாவில் இருந்து இரண்டரை லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளார்.

இதனை கவனிக்காத கடை உரிமையாளர் மாலை கதவைத் திறந்து பார்க்கும்போது பணம் இல்லாதது தெரியவந்தது. இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பிச்சை எடுக்க வந்த பெண் கும்பல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அங்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இந்த பெண்கள் கூட்டத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். சமீப காலமாக வட மாநிலங்களிலிருந்து வரும் இத்தகைய பெண்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது வழக்கமாகி வருகிறது.

Views: - 28

0

0