ஆந்திரா அருகே துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பரிதாப பலி : சொத்து தகராறில் முன்னாள் ராணுவ வீரர் அட்டூழியம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2021, 4:33 pm
Andhra Shoot - Updatenews360
Quick Share

ஆந்திரா : குண்டூர் மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக முன்னாள் ராணுவ வீரர் தனது துப்பாக்கியை எடுத்து சுட்டத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரரான சாம்ப சிவராவ். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த சிவா, பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சொத்துத் தகராறு இருந்துள்ளது.

இதனால் நேற்று ஊர் பஞ்சாயத்து நடைபெற்றது. இதில் பேசிய ஊர் தலைவர்கள் இருவரும் சமரசமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். இதனை பொருட்படுத்தாத முன்னாள் ராணுவ வீரரான சாம்பசிவ ராவ் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் கோபம் அதிகமான நிலையில் தன் வீட்டில் வைத்து இருந்த கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்து சிவா வீட்டின் முன் நான்கு முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் பாலகிருஷ்ணா, சிவா ஆகியோர் மீது குண்டு பாய்ந்ததில் சிவா, பாலகிருஷ்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஆஞ்சநேயலு என்பவர் தீவிர காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுகுறித்து ராயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து சாம்பசிவராவ் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்தது கிராமத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 222

0

0