அதிகாரப் பேராசையில் பால் தாக்கரேவின் கொள்கையை ஆற்றில் கொட்டிய உத்தவ் தாக்கரே..! அமித் ஷா அதிரடி..!

7 February 2021, 7:41 pm
Amit_Shah_UpdateNews360
Quick Share

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவைத் தாக்கி, அவரது தந்தை மற்றும் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் கொள்கைகளை அதிகாரத்திற்கான பேராசை காரணமாக ஆற்றில் கொட்டியதாக குற்றம் சாட்டினார்.

உத்தவ் மற்றும் அவரது வேட்பாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்துடன் பிரச்சாரம் செய்ததாகவும், 2019 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலின் போது அவரது பெயரில் வாக்குகள் கேட்டதாகவும், ஆனால் மற்ற கட்சிகளுடன் அரசாங்கத்தை அமைத்ததாகவும் அவர் கூறினார்.

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் கன்காவ்லியில் ஒரு மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் பேசிய அமித் ஷா, “இங்கே சிலர் மூடிய அறையில் நாங்கள் வாக்குறுதிகள் அளித்ததாக கூறுகிறார்கள். அது உண்மையல்ல” என்று கூறினார்.

“வாக்குறுதி அளிக்கப்பட்டதாக வைத்துக் கொள்வோம். உத்தவ் ஜி, உங்கள் வேட்பாளர்கள் அனைவரும் மோடி ஜியின் 2.5 மடங்கு பெரிய படத்தை பேனர்களில் வைத்து பிரச்சாரம் செய்தனர். மேலும் நீங்கள் அவரது பெயரில் வாக்குகளை கேட்டீர்கள்.” என்று அவர் மேலும் கூறினார்.

மகாராஷ்டிரா முதல்வர் வேட்பாளராக தேவேந்திர ஃபட்னவிஸ் குறித்த பாரதிய ஜனதா நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்த உள்துறை அமைச்சர், “நீங்கள் என்னையும் மோடி ஜியையும் இணைத்தீர்கள். தேவேந்திர ஃபட்னாவிஸ் தான் எங்கள் முதல்வர் முகம் என்று நாங்கள் சொன்னோம். ஏன் நீங்கள் அப்போதே எதிர்க்கவில்லை? எந்த வாக்குறுதியும் பேச்சும் இது தொடர்பாக இல்லை.” எனக் கூறினார்.

“அதிகாரத்தின் பேராசை காரணமாக, அவர் பாலாசாகேப்பின் அனைத்து கொள்கைகளையும் டாபி ஆற்றில் போட்டு அதிகாரத்தை எடுத்துக் கொண்டார்” என்று உத்தவ் தாக்கரேவைத் தாக்கிய அமித் ஷா கூறினார்.

மகாராஷ்டிராவில் ஆளும் மகா விகாஸ் அகாதியை (சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் உள்ளடக்கியது) குறிவைத்து, அமித் ஷா, “இது மூன்று சக்கர ஆட்டோரிக்ஷா அரசாங்கம். இது அனைத்து முனைகளிலும் தோல்வியுற்றது” என்று கூறினார்.

மாநிலத்தில் முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக 2019’ல் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நீண்டகால கூட்டணிக் கட்சியான பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்டது.

முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகளாக தனது கட்சியுடன் பகிர்ந்து கொள்வதாக வாக்குறுதியளித்த பாஜக பின்னர் பேச்சை மாற்றியதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அப்போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0