அபராதம் கட்ட பணம் இல்லாததால் தாலியை கழட்டி தந்த பெண்

1 March 2021, 11:29 am
Quick Share

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்கு அபராதம் விதித்த போலீசாரிடம், ஒரு பெண் தனது தாலியை கழட்டி அளித்துள்ள சம்பவம், கர்நாடக மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியை சேர்ந்தவர் 30 வயதான பாரதி விபூதி.

இவர் தனது கணவருடன், இருசக்கர வாகனத்தில் பொருட்கள் வாங்க ஷாப்பிங் சென்றார். அப்போது இவர்கள் ஹெல்மெட் அணியவில்லை. குறைந்த அளவிலேயே,அவர்கள் தங்கள் கையில் பணம் வைத்து இருந்தனர். தாங்கள் வாங்கிய பொருட்கள் போக, தங்களது கைகளில் ரூ.100 மட்டுமே எஞ்சி இருந்தது. இதனிடையே, அவர்கள் சிற்றுண்டி சாப்பிட்டதில் அந்த பணமும் காலியானது.


இவர்கள் தங்களது வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டு இருக்கையில், போக்குவரத்து போலீசார் வரும்வழியில் அவர்களை நிறுத்தினர். ஹெல்மெட் அணியாத குற்றத்திற்காக, அவர்களுக்கு,போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர்.


அபராதம் கட்டிவிட்டு, இந்த இடத்தை விட்டு செல்லுறுமாறு போலீசார் கண்டிப்புடன் தெரிவித்து விட்டனர். தங்களிடம் இப்போது கைவசம் பணம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தும் போலீசார், அபராதம் கட்டினால் மட்டுமே, வண்டியை விட முடியும் என்று கண்டிப்பாக தெரிவித்து விட்டனர்.


அவர்கள் போலீசாரிடம் நடத்திய பேச்சுவரர்த்தையில் பலன் எற்படாத நிலையில்ல, பாரதி விபூதி, திடீரென்று, தான் அணிந்திருந்த தாலியை கழட்டி, அபராத பணத்திற்கு பதிலாக இதை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், போலீசாருக்கும்,அப்பெண்ணிற்கும் இடையே நடைபெற்ற உரையாடல் குறித்த வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 15

0

0