மத்திய அமைச்சரவை கூட்டம் திடீர் ரத்து : அமைச்சரவை விரிவாக்கம், அமைச்சர் குழு கூட்டமும் நடைபெறாது என அறிவிப்பு!!

7 July 2021, 8:43 am
Modi Cabinet Cancel - Updatenews360
Quick Share

டெல்லி : பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இருந்த மத்திய அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் முன்கூட்டியே அது குறித்து ஆலோசிக்க மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் நிலுவையில் உள்ள பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பிரதமர் மோடி அமைச்சரவை இந்த வாரம் விரிவுபடுத்தப்பட்டு அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடி தலைமையில் நடக்கவிருந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை நடக்கலாம் என கூறப்பட்ட நிலையில் கூட்டம் ரத்தாகி உள்ளது. என்ன காரணம் என்பது குறித்து சரியான தகவல் வெளியாகவில்லை.

Views: - 160

0

0