கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உத்தரபிரதேச எம்எல்ஏ மரணம்..! தொடர்ச்சியாக நான்கு எம்எல்ஏக்களை இழந்த பாஜக..!

7 May 2021, 12:23 pm
bjp_mla_raebareli_updatenews360
Quick Share

உத்தரபிரதேச மாநிலம் சலோன் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. தல் பகதூர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார். உத்தரபிரதேசத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி மரணமடைந்த நான்காவது பாஜக எம்.எல்.ஏ. தல் பகதூர் ஆவார்.

தல் பகதூர் 2017’ல் உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காங்கிரசின் சுரேஷ் சவுத்ரியை 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சலேன் தொகுதி ராய் பரேலி மாவட்டத்தில் உள்ளது.

பகதூருக்கு முன்பு, உயிர் இழந்த மற்ற மூன்று பாஜக எம்.எல்.ஏக்கள் ரமேஷ் திவாகர் (அவுரியா), சுரேஷ் ஸ்ரீவஸ்தவா (லக்னோ மேற்கு) மற்றும் கேசர் சிங் கங்வார் (நவாப்கஞ்ச்) ஆவர்.

தல் பகதூர் 1996’ஆம் ஆண்டில் சலோனில் இருந்து முதல் முறையாக வென்றார் மற்றும் ராஜ்நாத் சிங் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றினார்.

இதற்கிடையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பகதூர் காலமானதற்கு வருத்தம் தெரிவித்து அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Views: - 214

0

0