200 ரூபாய் கடன் தர மறுத்ததால் விபரீதம்..! கடை உரிமையாளர் சுட்டுக் கொலை..!

30 November 2020, 3:32 pm
Gun_SHot_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேசத்தின் அலிகார் பகுதியில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள நெரிசலான சந்தையில் 30 வயது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று குழந்தைகளின் தந்தையான அன்சார் அகமது, சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தின் கீழ் உள்ள ஷம்ஷாத் சந்தையில் டயர் பழுதுபார்க்கும் கடை வைத்திருந்தார். 

போதைக்கு அடிமையானவர் எனக் கூறப்படும் குற்றம் சாட்டப்பட்ட ஆசிப், கடந்த சனிக்கிழமையன்று, தனது இருசக்கர வாகனத்தை அடகு வைப்பதற்காக அன்சார் முகமதுவை அணுகியுள்ளார். ஆனால் அன்சார் அகமது அதை நிராகரித்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ஆசிப், அன்சார் அகமதுவிடம் 200 ரூபாய் கொடுக்கும்படி வற்புறுத்த்தியுள்ளார். ஆனால் அன்சார் அகமது கொடுக்க மறுத்ததால், கண்ணிமைக்கும் நேரத்தில் தனது சட்டைப்பையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து, அன்சாரின் நெற்றிப்பொட்டிலேயே சுட்டுக் கொன்றார்.

பின்னர் அங்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அன்சார் அகமதுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோனைக்கு அனுப்பியதோடு, குற்றவாளியைத் தேடி வருகிறது.

Views: - 17

0

0