மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு: வெங்கைய்யா நாயுடு அறிவிப்பு..!!

8 February 2021, 4:36 pm
rajyasabha - updatenews360
Quick Share

புதுடெல்லி: மாநிலங்களவை நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு உத்தரவிட்டார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொது பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் தொடர்ச்சியாக மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் இன்று காலை வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று பேசினார். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டு வந்தது குறித்தும், எடுத்த நடவடிக்கைகள், தடுப்பு முயற்சிகளை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். தொடர்ந்து பேசிய அவர்,

வேளாண் சட்டங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதை இந்த சபையில் நான் மீண்டும் படிக்க விரும்புகிறேன். வேளாண் சட்டங்கள் தொடர்பாக தற்போது யு-டர்ன் செய்திருப்பவர்களும் இதற்கு ஒப்புக்கொள்வார்கள் என நம்புகிறேன். கடந்த 1930களில் அமைக்கப்பட்ட சந்தைப்படுத்துதல் முறையால், நமது விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை அதிகமான லாபத்துக்கு விற்பனை செய்வது தடுக்கப்படுகிறது.

அனைத்து விதமான தடைகளையும் நீக்குவதே எங்களுடைய நோக்கம். பரந்த அடிப்படையிலான பொதுவான ஓர் சந்தையை இந்தியா நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மாநிலங்களவை நாளை காலை 9 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடு அறிவித்தார்.

Views: - 0

0

0