மோடியை தாறுமாறாக விமர்சித்து பதிவு… ராஜ்யசபா அலுவலக அதிகாரி மீது நடவடிக்கை!

14 February 2020, 9:42 pm
Venkaiya Naidu 01 updatenews360
Quick Share

பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பதிவிட்ட குற்றச்சாட்டில், மாநிலங்களவை தலைமைச்செயலக உதவி இயக்குநர்  உருஜுல் ஹசன் பதவியிறக்கம் செய்யப்பட்டார்.

பிரதமர்  மோடி,  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோருக்கு எதிராக, சமூகவலைத்தளங்களில் உருஜுல் ஹசன் பதிவிட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, மாநிலங்களவை தலைமைச் செயலகம் விளக்கம் கேட்டு அவருக்கு மெமோ அளித்தது. அதில், “பிரதமர், சில மத்திய அமைச்சர்கள் மற்றும் முதல்வர்களை அவதூறு செய்தும், கேலி செய்யும் பதிவுகளைப் பகிர்ந்ததன் அடிப்படையில்,  நீங்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது உறுதியாகி உள்ளது. எனவே, உதவி இயக்குநர் (பாதுகாப்பு) பதவியிறக்கம் செய்யப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால்,  உருஜுல் ஹசன் தரப்பில் மற்றவர்களின் பதிவுகளை பகிர்ந்து மட்டுமே வந்தாக விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. எனினும், 5 ஆண்டுகளுக்கு பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

மத்திய சிவில் சேவைகள் நடத்தை விதிகள், 1964ன் படிஅரசு அதிகாரிகள், ஊழியர்கள் எந்த வித அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவது கடும் நடவடிக்கைகளுக்கு உரியதாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் அறிவுறுத்தலின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply