மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ₹5 லட்சம் அபராதம் : கொல்கத்தா நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!

7 July 2021, 12:36 pm
Mamata 5 Lakhs - Updatenews360
Quick Share

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபாரம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கில் இருந்து விலக மறுத்த நீதிபதி கௌஷிக் சந்தா ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

நந்திகிராமில் பாஜக வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதி கௌஷிக் சந்தா விசாரிக்க முதல்வர் மம்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நந்திகிராம் தொகுதியில் தன்னை சுவேந்து அதிகாரி தோற்கடித்ததை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கில் தனது மனுவை நீதிபதி கௌஷிக் சந்தா விசாரிக்க மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி கௌஷிக் சந்தாவுக்கு பாஜக தலைவர்களுடன் தொடர்பு என மம்தா பானர்ஜி தரப்பு வழக்கறிஞர் குற்றசாட்டியிருந்தார். ஆகையால், நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறி மம்தா பானர்ஜிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா தோல்வி சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Views: - 178

0

0