இறந்த தந்தையின் உடலைக் காண 51,000 கேட்ட மேற்கு வங்க மருத்துவமனை..! குடும்பத்திற்குக் காட்டாமலேயே தகனம் செய்து அடாவடி..!

10 August 2020, 6:59 pm
cremation_coronavirus_updatenews360
Quick Share

மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்த உறவினரின் உடலைக் காண ரூ 51,000 செலுத்துமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து இறந்த நபரின் உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சனிக்கிழமை நள்ளிரவில் காலமான ஹரி குப்தாவின் மகன் சாகர் குப்தா, சர்ச்சைக்குரிய தனியார் மருத்துவமனை பல மணி நேரம் கழித்தும் மரணம் குறித்து தங்களுக்கு தெரிவிக்கவில்லை எனக் கூறினார்.

“நேற்று பிற்பகல், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த எனது தந்தை அதிகாலை 1 மணியளவில் காலமானார் என்று எங்களுக்கு அழைப்பு வந்தது. இது குறித்து எங்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று நாங்கள் கேள்வி எழுப்பியபோது, மருத்துவமனை அதிகாரிகள் அவர்களிடம், எங்களுடைய தொடர்பு எண்கள் இல்லை என்று கூறினர்.” என்று சாகர் கூறினார் .

குடும்பத்தினர் மருத்துவமனையை அடைந்தபோது, உடல் தகனத்திற்காக அனுப்பப்பட்டதாக அவர்களிடம் கூறப்பட்டது. சடலம் எடுக்கப்பட்ட ஷிபூர் தகன மைதானத்தை குடும்பத்தினர் அடைந்தபோது, தந்தையின் உடலைக் காண ரூ 51,000 செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

குடும்பத்தினர் இதைப் பற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து ரூ 31,000’ஆகக் குறைக்கப்பட்டன. இருப்பினும், குடும்பத்தினர் போலீஸை அணுக முடிவு செய்தனர்.

இதையடுத்து ஒரு போலீஸ் அதிகாரி தகனத்திற்கு வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால் அங்கு இருந்த மருத்துவமனை அதிகாரிகள் அவரது கோரிக்கைகளையும் மறுத்துவிட்டனர். “உடலை தகனம் செய்த மருத்துவமனை அதிகாரிகள் காவல்துறையினரிடம் திரும்பிச் சென்று உயர் அதிகாரிகளிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டனர்.” என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் இந்த சம்பவத்தை வீடியோ எடுக்க முயன்றனர். ஆனால் அவர்களது தொலைபேசி பறிக்கப்பட்டது. இறுதியில், குடும்பத்திற்குக் காட்டாமல் உடல் தகனம் செய்யப்பட்டது.

மருத்துவமனை தரப்பில் குடும்பத்தின் தொடர்பு குறித்த தகவல் இல்லை என்று தொடர்ந்து கூறியதால் உடல் நேரடியாக தகனத்திற்கு அனுப்பப்பட்டது என கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த வழக்கில் முறையான போலீஸ் புகார் அளிக்க குடும்பம் இப்போது திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே குடும்பத்தினருக்குக் கூட காட்டாமல் உடலை தகனம் செய்ததை அறிந்து இறந்தவரின் உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Views: - 12

0

0