கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை: உத்தரபிரதேச மாநிலத்திற்கு பாராட்டு…!!
18 November 2020, 10:05 amQuick Share
லக்னோ: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உத்தரபிரதேச அரசு சிறப்பாக செயல்படுத்தி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உத்தரபிரதேச அரசு சிறப்பாக செயல்படுத்தி இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி ரோடரிகோ ஆப்ரின் பாராட்டு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது,
கொரோனா பாதித்தவர்களின் தொடர்புகளை அடையாளம் காண்பதில் உத்தரபிரதேச அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது. 70 ஆயிரம் முன்கள பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தகைய செயல்பாடுகள், மற்ற மாநிலங்கள் பின்பற்றும் அளவுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.