விஷ பாம்பை கடிக்க வைத்து மனைவி கொலை: கணவனுக்கு ஒரே நேரத்தில் 4 ஆயுள் தண்டனை…நீதிமன்றம் அதிரடி..!!

Author: Aarthi Sivakumar
13 October 2021, 12:42 pm
Quick Share

கொல்லம்: கேரளாவில் பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் உத்ரா. இவருக்கும் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த வங்கி அதிகாரி சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.


இதனையடுத்து, இவர்கள் குடும்பத்துடன் அரூர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு உத்ராவை விஷப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். இந்நிலையில், சிறிது மாதத்திலேயே உத்ராவை மீண்டும் விஷப்பாம்பு கடித்ததில் அவர் உயிரிழந்தார். உத்ரா உயிரிழப்பில் அவரது உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து, மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி போலீஸ் நிலையில் புகாரளித்தனர். உத்ராவின் கணவர் மீதான சந்தேகத்தில் அவரை விசாரித்ததில் சூரஜ் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். உத்ரா வீட்டாரிடம் இருந்து ஏற்கனவே, 100 பவுன் நகை, 10 லட்சம் ரூபாய் ரொக்கம், சொத்து, கார் பல கோடிக்கணக்கில் வரதட்சணை வாங்கி கொண்டும் மேலும், வரதட்சணைக்காக மனைவியை கொலை செய்தது தெரியவந்தது.

Husband who murdered his wife by bitten by a snake bakir vote The horrific incident in Kerala

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கு கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சமீபத்தில் இது தொடர்பாக 100 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சூரஜ் குற்றவாளி என்று கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், இதற்கான தண்டனை விவரத்தை கொல்லம் நீதிமன்றம் இன்று அறிவித்தது. மனைவியை பாம்பை ஏவி கொடூரமாக கொலை செய்த கணவன் சூரஜ்-க்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சூரஜூக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்ததுடன் 4 ஆயுள் தண்டனை ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிட்டுள்ளது.

Husband who murdered his wife by bitten by a snake bakir vote The horrific incident in Kerala

Views: - 167

0

0