மம்தா பானர்ஜி தோற்றால் கையை வெட்டுவேன்..! பதறவைத்த மேற்குவங்க அமைச்சர்..!

21 January 2021, 9:27 am
Madan_Mitra_UpdateNews360
Quick Share

இந்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தோற்றால் கைகளை வெட்டுவேன் என்று திரிணாமுல் காங்கிரஸின் (டி.எம்.சி) மூத்த தலைவர் மற்றும் மேற்குவங்க அமைச்சருமான மதன் மித்ரா கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைந்த முன்னாள் டிஎம்சி தலைவர் சுவேந்து அதிகாரிக்கு எதிராக நந்திகிராமில் இருந்து போட்டியிடுவதாக மம்தா பானர்ஜி அறிவித்ததற்கு பதிலளித்த மதன் மித்ரா, “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சுவேந்து அதிகாரிக்கு எதிரான தேர்தலில் தோற்றால், என் கைகளை வெட்டுவேன்.” எனக் கூறினார்.

மம்தாவின் வெற்றி குறித்து அதிக நம்பிக்கை இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த மித்ரா, தேர்தலில் மம்தா தோல்வியடையப் போவதில்லை என்பது தனக்குத் தெரியும் என்றும் அதனால்தான் அவர் இவ்வாறு சவால் விட்டுள்ளதாகவும் கூறினார்.

பாஜகவுடன் போட்டியிடுவது குறித்து பேசிய மதன் மித்ரா, “நந்திகிராமில் மம்தாவின் நிலை மிகவும் மோசமாக இருந்தால் அவர்கள் இறந்திருக்க வேண்டும். ஆனால் அது அப்படி இல்லை. டி.எம்.சி சுவேந்துக்கு எதிராக போராடுவது மட்டுமல்லாது பாஜகவையும் எதிர்த்து போராடுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜிக்கு சுவேந்து அதிகாரி விடுத்த 50,000 வாக்குகள் வித்தியாச சவால் குறித்து பேசிய மதன் மித்ரா, “அவர் நிறைய விஷயங்களைச் சொல்கிறார். அவர் சொல்ல வேண்டியிருந்தால் அவர் சொல்லட்டும். ஆனால் ஒரு விஷயத்தில், அவர் கூறியது சரி. உண்மையில் வெறும் 50,000 வாக்குகள் அல்ல, ஆனால் மம்தா பானர்ஜி குறைந்தபட்சம் 1,00,000 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.” எனக் கூறினார்.

இந்நிலையில் மம்தா தோற்றால் கையை வெட்டுவேன் என மேற்குவங்க அமைச்சர் சவால் விட்டுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 14

0

0