மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு தடை நீக்கமா..? மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு..!

22 August 2020, 4:38 pm
Quick Share

சீனாவின் வூகானில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ், வாழ்வின் நடைமுறையையே முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளது. நாடுகளுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை மாநிலங்களுக்கு இடையே மக்கள் பயணிக்க தடை மாவட்ட வாரியாக தடை என வீட்டிற்குள்ளேயே மக்கள் முடங்கி விட்டனர்.

ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்தும் பாதுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்த சூழலில், ஊரங்கில் மத்திய மாநில அரசுகள் படிப்படியான தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தமிழகம் முழுதும் இ.பாஸ் அனைவருக்கும் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

ஆனால், மாநில வாரியான போக்கு வரத்துக்கு இன்றுவரை தடை தொடர்ந்து நீடிக்கிறது. இந்த சூழலில், மத்திய உள்துறை அமைச்சகம் , மாநிலங்களுக்குள்ளும், வெளியேயும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக் கூடாது என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் அனிப்பியுள்ளது. மேலும், பொதுமக்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் மாநிலங்களுக்கு இடையே கடக்க அனுமதிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.