ஓடும் ரயிலில் இருந்து குழந்தையுடன் தவறி விழுந்து விபத்தில் சிக்கிய பெண் : ஷாக் வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2021, 5:35 pm
Rail Woman Fell Down -Updatenews360
Quick Share

உத்தரபிரதேசம் : கையில் குந்தையுடன் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண் தவறி விழுந்து ரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

உத்தரபிரதேசம் மாநிலம் சர்பார்க் ரயில் நிலையத்தில் கழிவறைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த ரயிலில் குழந்தையுடன் ஏறிய பெண், மீண்டும் கீழே இறங்குவதற்குள் ரயில் புறப்பட்டது.

இதையடுத்து பதற்றமடைந்த பெண், இறங்க முற்பட்ட போது கால் தவறி கீழே விழுந்து நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையேயான சிறிய இடைவெளியில் சிக்கிக்கொண்டார்.

இதையடுத்து அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு போலீசார், உடனே செயினை இழுத்து ரயிலை நிறுத்தி தாயையும், சேயையும் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே சமயம் உயிர்களை காப்பாற்றிய பாதுகாப்பு போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Views: - 136

1

0