13 வயது சிறுமியை தத்தெடுத்து விபச்சாரத்தில் தள்ளிய பெண்: 6 மாத துஷ்பிரயோகம்…போலீஸ் வலையில் சிக்கிய 92 கொடூரர்கள்..!!

Author: Rajesh
20 April 2022, 1:27 pm
Quick Share

விஜயவாடா: 13 வயது சிறுமியை 6 மாதங்களாக விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பலை சேர்ந்த 92 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் வசித்து வந்த ஒரு தம்பதியின் 13 வயது மகள் அங்குள்ள ஒரு அரசுப் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அந்தச் சிறுமியின் தாயாரும் சிறுமிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தாய் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மருத்துவமனையில் சிறுமியின் தாயுடன் நட்பாக இருந்த சொர்ணகுமாரி என்ற பெண்பணியாளர், அந்த சிறுமியை தத்தெடுத்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமியின் தந்தை, தனது மகளை சுவர்ணகுமாரியிடம் ஒப்படைத்திருக்கிறார்.
இதனையடுத்து, அந்த சிறுமியை அழைத்து சென்ற சொர்ணகுமாரி, அங்குள்ள விஜயவாடா, காக்கிநாடா, நெல்லூர் , ஐதராபாத் போன்ற பல்வேறு இடங்களுக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.

அந்த சிறுமியால் எதுவுமே செய்ய முடியவில்லை. அந்த சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது. இந்நிலையில் அந்த கும்பலிடம் இருந்து எப்படியோ தப்பித்த அந்த சிறுமி, குண்டூரில் உள்ள தனது தந்தையிடம் தனக்கு நடந்த இந்த பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறித்து கூறி அழுதிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, குண்டூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து உள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியில் தொழிலில் தள்ளிய சொர்ணகுமாரி உட்பட அந்த மருத்துவமனை ஊழியர்கள் 21 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

அதன் தொடர்ச்சியாகவே, சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஆந்திர மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 61 போரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் விபச்சார கும்பல் தொடர்பாக மேலும் 10 பேரை குண்டூர் மேற்கு மண்டல போலீசார் நேற்று கைது செய்தனர்.

Views: - 929

0

0