காதலிக்க மறுத்த இளம்பெண்…கழுத்தறுத்து கொன்ற இளைஞர்…ஆந்திராவில் அதிர்ச்சி…!!

1 November 2020, 3:36 pm
crime - updatenews360
Quick Share

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாகபட்டினம் மாவட்டம் காஜுவாக்காவை சேர்ந்த வரலட்சுமி கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த அகிலன் என்பவன் வரலட்சுமியை காதலிப்பதாக கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உறவினரின் திருமணத்தில் பங்கேற்க சாய்பாபா கோவிலுக்கு வரலட்சுமி சென்றுள்ளார். இதனை அறிந்து அந்த இளைஞரும் சென்றுள்ளார்.

தனியாக இருந்த பெண்ணிடம் தகராறு செய்த அகிலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, திடீரென வரலட்சுமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளார். இதனால் வரலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான கொலையாளியை தீவிர தேடி வருகின்றனர்.

Views: - 20

0

0