சாலையில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்… திறந்து பார்த்த போலீஸாருக்கு அதிர்ச்சி ; சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை..!!

Author: Babu Lakshmanan
20 November 2023, 1:23 pm
Quick Share

மும்பை அருகே பரபரப்பான சாலையில் கிடந்த சூட்கேஸில் பெண்ணின் பிணம் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மத்திய மும்பையில் உள்ள குர்லாவில் நேற்று நண்பகல் வேளையில் சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். பின்னர், சூட்கேஸை திறந்து பார்த்த போது, அதில் 25 மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அந்த பெண் டி-சர்ட் மற்றும் டிராக் பேண்ட் அணிந்திருந்ததாகவும், அவர் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

  • Gold - Updatenews360 தங்கம் விலை சரிந்தது.. நகை வாங்க சரியான நேரம் : இன்றைய விலை நிலவரம்!!
  • Views: - 352

    0

    0