சிகனலில் அமர்ந்து சிக்கன் பிரியாணியுடன் மது அருந்திய இளைஞர்கள்.. ஷாக் காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2023, 2:09 pm
Drunk - Updatenews360
Quick Share

டாஸ்மாக் ‘பார்’ போல மாறிய போக்குவரத்து போலீசாரின் நிழற்குடை.. ஜாலியாக அமர்ந்து மது குடிக்கும் இளைஞர்கள்.. ஷாக் காட்சி!

ஐதராபாத்தில் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படக்கூடிய மாதாபூர் சந்திப்பு அருகே போக்குவரத்து போலீஸ்சாருக்காக அமைக்கப்பட்டிருந்த நிழற் குடையின் கீழ் அமர்ந்து மது அருந்தி பிரியாணி சாப்பிட்ட இளைஞர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாதப்பூரில் உள்ள ஹைடெக் சிட்டி சந்திப்பு எப்போதும் பரபரப்பாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்பு.

இங்கு போக்குவரத்து போலீசாருக்காக அமைக்கப்பட்டிருந்த நிழற்குடையின் கீழ் அமர்ந்து இரண்டு இளைஞர்கள் மது அருந்திவிட்டு பிரியாணி சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.

இதனை வீடியோ எடுத்த சிலர் சமூகவளைதலத்தில் பதிவு செய்த நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

  • Hema கேரள சினிமாத்துறையை அதிர வைத்த பாலியல் விவகாரம்.. முன்ஜாமீன் கேட்டு அலையும் பிரபல நடிகர்!
  • Views: - 265

    0

    0