ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 வருஷம் உள்ளே..! இது ‘அக்கட’ தேச அறிவிப்பு…!

14 February 2020, 9:47 pm
Quick Share

ஐதராபாத்: ஆந்திராவில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டுகள் சிறை என்று அதிரடியாக அறிவித்து இருக்கிறார் அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி.

ஆந்திராவில் கடந்த ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார்.

அவர் பதவியேற்றது முதலே அதிரடிக்கு பஞ்சமில்லை. பல திட்டங்களை அறிவித்து மக்களையும், மற்ற அரசியல் கட்சியினரையும் திக்கு முக்காட வைத்து வருகிறார்.

தற்போது அம்மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் வர உள்ளது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினர் அதிரடி வியூகங்களை வகுத்து வருகின்றனர். ஆனால் இதை எல்லாம் அடித்து, தூள் பண்ணும் விதமாக, ஒரு அறிவிப்பை வெளியிட்டு அசத்தி இருக்கிறார் ஜெகன் மோகன்.

அதாவது, உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Leave a Reply