வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தங்களை இந்தியர் என்று சொல்வதில் பெருமைப்படுகின்றனர் : இதுவே மோடி அரசின் சாதனை… மத்திய அமைச்சர் முரளிதரன்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2022, 4:02 pm
Minister Muralidharan - Updatenews360
Quick Share

குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பில் ‘பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சகாப்தத்தில் இந்திய வெளியுறவுக் கொள்கையின் வெற்றி வரலாறு’ என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் முரளிதரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மாணவர்களிடையே சிறப்புரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெளியுறவு துறை சார்ந்து பாஜக அரசால் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், உலக அளவில் இந்தியாவின் பெருமை வளர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்பு சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் முரளிதரன்,பல தலைமுறைகளுக்கு முன்னால் வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் தற்போது தங்களையும் இந்தியர்கள் என குறிப்பிட வேண்டும் என ஆசைப்படுகின்றனர். அதுவே எட்டு ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சிறந்த செயல்பாடாக நான் கருதுகிறேன்.

இந்தியாவின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் தாங்களும் இருக்க வேண்டும் என வெளிநாடுவாழ் இந்தியர்கள் கருதுகின்றனர். உக்ரைன் போர் சூழலிலும், ஏமன் நாட்டில் ஏற்பட்ட பதட்டமான காலங்களிலும், கோவிட் காலகட்டத்திலும் வெளிநாடுகளில் தத்தளித்த இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு கொண்டு வருவதில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

எதிர்காலங்களிலும் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் வெளியுறவுத் துறையின் செயல்பாடுகள் அமையும்’ என அவர் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய இணையமைச்சர், சமீபத்திய நிகழ்வுகளால் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் உறவுகளில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார்.

Views: - 464

0

0