தனியார் பேருந்துகளில் பேட்டரி திருட வந்த கும்பல் : காவலாளியை கொடூரமாக தாக்கி கொலை செய்த அதிர்ச்சி

Author: Babu Lakshmanan
16 May 2022, 7:22 pm
Quick Share

மதுரையில் தனியார் பேருந்துகளில் பேட்டரியை திருட வந்த கும்பல் வாட்சுமேன் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மேலக்கால் பகுதியில் தனியார் பேருந்து நிறுத்துமிடத்தில் வாட்சுமேனாக பணியாற்றி வந்த இரும்பாடி பகுதியை சேர்ந்த முருகேசன் (64) என்பவர் இன்று அதிகாலையில் அவரது கழுத்து தலையில் கொடூரமாக தாக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடைந்துள்ளார்.

சம்பவம் குறித்து மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தனியார் பேருந்து நிறுத்த குடோனில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் இருந்து பேட்டரிகளை திருடுவதற்காக வந்த கும்பல் முருகேசனை கொலை செய்து தப்பி ஓடியுள்ளனர் என கூறப்படுகிறது.

தொடர்ந்து கொலையான முருகேசனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக எஸ்எஸ் காலனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 568

0

0