நோயாளியிடம் இருந்து ரூ.2 லட்சம் பணம், மோதிரம் திருட்டு : தனியார் மருத்துவமனையில் கைவரிசை.. சிசிடிவி காட்சியில் சிக்கிய நபர்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2022, 6:45 pm
Theft from Patient - Updatenews360
Quick Share

கோவை : மருத்துவமனையில் நோயாளியிடம் பணத்தை திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்து

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளியின் அறைக்கு சென்று பணம் மற்றும் தங்க நகை திருடி சென்றதாக புகார் எழுந்துள்ளது.

கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் சுப்பிரமணியம். இவர் கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் பணி செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லை என்று சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர்.

இந்நிலையில் அங்கு வந்த மர்ம நபர் அவர் வைத்திருந்த இரண்டு லட்ச ரூபாய் பணம் மற்றும் தங்க மோதிரத்தை திருடிச் சென்றதாக சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அங்கு பதிவான சி.சி.டி.வி காட்சிகள் காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 478

0

0