நியூயார்க்கில் பயங்கரம்… மெட்ரோ ரயில் நிலையத்தில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு… 5 பேர் பலி… பகீர் கிளப்பும் வீடியோ…!!

Author: Babu Lakshmanan
12 April 2022, 8:11 pm
Quick Share

நியூயார்க் : நியூயார்க்கில் உள்ள மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் உள்ள பரூக்லைன் மெட்ரோ ரயில் நிலையத்தின் சுரங்கப்பாதையில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும், 13 பேர் பலத்த காயங்களுடன் அருகே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், “துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கட்டுமானப் பணிகளின் போது பயன்படுத்தக் கூடிய ஆரஞ்சு நிற மேலாடை அணிந்திருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், வெடிபொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை,” என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பயணிகள் ரத்த காயங்களுடன் படுத்துக்கிடப்பதும், அவர்களுக்கு சக பயணிகள் உதவி செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 1465

0

0