ஓபிஎஸ் ஒரு சுயநலவாதி.. பதவி தரலைனா கட்சியை அழிச்சுருவனு மிரட்டுவதா? இபிஎஸ்தான் தகுதியானவர் : முன்னாள் எம்பி வலியுறுத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
19 June 2022, 6:36 pm
Admk Former MP - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : அதிமுக கட்சியை காப்பாற்ற எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமை ஏற்று வழி நடத்த வேண்டும் என அக்கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ,முன்னாள் அமைப்பு செயலாளர், தூத்துக்குடி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நட்டர்ஜி தனது கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அதிரடி பேட்டி அளித்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1972 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு எம்ஜிஆர் தொடர்ந்து ஜெயலலிதா தலைமையில் இயக்கம் உச்சம் அடைந்தது. இந்த கட்சியில் இரட்டை தலைமை ஏற்பட்டதன் காரணமாக தொண்டர்கள் பல்வேறு குழப்பத்திற்கு ஆளாகிறார்கள்.

அவருடைய குழப்பம் நீங்க கட்சிக்கு ஒற்றை தலைமை அவசியம் என்று கூறிய அவர், அதிமுக ஒரு பேரியக்கம் அது நல்ல முறையில் வளர எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்றால் வரக்கூடிய தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்று கூறினார்.

இரட்டைத் தலைமை இருப்பதால் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். தொண்டர்களின் குழப்பத்தை நீக்க கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் அதுவும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைய வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர் அவரால் தான் இந்த இயக்கத்தை வழி நடத்திச் செல்ல முடியும்.
வரும் தேர்தலில் வெற்றியும் பெற முடியும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியையே ஏற்றுக் கொள்ள விரும்புகின்றனர் எனவே அவர்தான் இந்த இயக்கத்தின் தலைவராக வரவேண்டும் .

ஓபிஎஸ் சுயநலவாதி என்று கட்சித் தொண்டர்கள் நினைக்கின்றனர் வணங்கி பணிபவர்கள் எங்களுக்கு தேவையில்லை துணிச்சலாக தொண்டர்களை பாதுகாக்கக்கூடிய தலைவரே இப்போது அதிமுகவிற்கு வேண்டும் இரட்டை தலைமையால் தொண்டர்களுக்கு எந்த ஒரு நன்மையும் நடக்கவில்லை ஓபிஎஸ் கட்சியில் தனக்கு பதவி இல்லை என்றால் கட்சியை அழித்துவிடுவோம் என்ற மிரட்டும் தோனிக்கு போய் விட்டார் இது ஏற்புடையது அல்ல.

ஓபிஎஸ் பின்னணியில் சசிகலா அம்மாவின் கை உள்ளது ஓபிஎஸ் தனது மகனை மட்டுமே ஜெயிக்க வைத்துள்ளார். தனது மகனை ஜெயிக்க வைத்த அவருக்கு கூட 2 எம்பி ஜெயிக்க வைக்க தெரியாதா? அதை செய்யவில்லையே. ஓபிஎஸ் இடம் கட்சியை கொடுத்தால் அவர் கட்சியை பிஜேபிக்கு கொண்டு சேர்த்துவிடுவார்.

Views: - 434

0

0