இன, மத உணர்வுகளை புண்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின்படி நடவடிக்கை… அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை…

31 July 2020, 5:07 pm
Quick Share

திருவாரூர்: இன மத உணர்வுகளை புண்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எச்சரித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோன தடுப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். ,தைதொடர்ந்து பொதுமக்களுக்கு சத்து மாத்திரைகள் கபசுர குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் பேசுகையில், சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றல் பாதிக்கப்பட்டு குணமடைபவர்களின் எணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், இதே நிலை தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் விரைவில் வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும்  கைகழுவுதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல் முகக்கவசம் அணிதல் போன்ற பழக்கங்களை கொரோனா நம்மை விட்டு ஒழியும் வரை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றும் பகுதிகளில் கொரோனா தாக்கம் மிக குறைவாக இருப்பதை நடைமுறை அனுபவம் மூலம் தெரிய வருகிறது. கந்தசஷ்டி கவசம், நபிகள் நாயகம், தந்தை பெரியார் ,

பாண்டிச்சேரியில் எம். ஜி ஆர் என தலைவர்களின் சிலைகளை அவமதிப்பவர்கள் மீது ஏற்கனவே குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் காமராஜ், இன மத உணர்வுகளை வேறுபடுத்தி அதில் லாபம் சம்பாதிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் எம். ஜி. ஆர் , ஜெயலலிதா இரு பெரும் தலைவர்களும் உலகம் இருக்கும் வரை இவர்களின் பெயர் நிலைக்கும் என்பதற்கு உதாரணமாக சென்னை மெட்ரோ ரயிலுக்கு பேரை சூட்டப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பாவர்களுக்கு சரியான சிகிச்சையும் நல்ல உணவும் வழங்கப்படுவதாகவும் இதனால தான் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நேற்று வரை சுமார் 27 லட்சத்து 93 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது  ஒரு மயில் கல் என தெரிவித்தார்.

 இதன் மூலம் 4 லட்சத்து 63 ஆயிரம் விவசாயிகள் வாங்கி கணக்கில் 5 ஆயிரத்து 483 கோடி ருபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், 2011ஆம் ஆண்டுகளில் 12 லட்சம் மெட்ரிக் டன்னாக கொள்ளளவு கொண்ட நெல் கிடங்கு  தற்போது சுமார் 24 லட்சம் மெட்ரிக்  டன்னாக உயத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.