குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும்… பாஜக தமிழகத் தலைவர் முருகன்…

13 May 2020, 3:17 pm
Quick Share

விழுப்புரம்: சிறுமியை எரித்து கொன்ற குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என பாஜக தமிழக தலைவர் முருகன் வலியுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் அருகே சிறுமதுரை கிராமத்தில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீயின் பெற்றோரை தமிழக பாஜக தலைவர் முருகன் நேரில் சந்தித்து 1 லட்சம் பணமும் வழங்கி ஆறுதல் கூறினார். பின்பு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- குற்றவாளிகள் அனைவருக்கும் உச்சபட்ச தண்டனை தூக்குதண்டனை வழங்க வேண்டும். இந்த வழக்கு தமிழகத்திற்கு ஒரு முன்மாதிரியான வழக்காக இருக்கவேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா காலகட்டத்தில் மக்களைப் பாதுகாப்பதை தவறவிட்டு, கொரோனா காலத்திலும் அரசியல் செய்து வருகிறார். எனவே அவர் இதனை தவிர்க்க வேண்டும். தமிழக அரசு கொரோனா கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், முதல் நாளிலிருந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.