மூதாட்டியிடம் செயின் பறிப்பு… மர்ம நபருக்கு வலை…

15 February 2020, 5:13 pm
Thiruvallur Chain paripu - updatenews360
Quick Share

திருவள்ளூர்: லட்சுமிபுரத்தில் மூதாட்டியிடம் செயினை பறித்து கொண்டு தலைக்கவசம் அணிந்தபடி இருசக்கரவாகனத்தில் தப்பியோடிய மர்ம நபரை சிசிடிவி கேமரா பதிவு கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் லட்சுமிபுரம் திலகர் தெருவை சேர்ந்தவர் லட்சுமி பாய் (63). இவர் நேற்று காலை அருகில் உள்ள செகரட்டரி காலனி அருகிலிருந்த மளிகை கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணிந்து வந்த மர்ம நபர் லட்சுமிபாய் முகவரி கேட்பது போல் கேட்டு அவர் அணிந்திருந்த செயினை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

இவருக்கு கீழே விழுந்ததில் இடது கையில் லேசான காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் வருவதற்குள் மர்ம ஆசாமி மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். அவர்கள் பறித்து சென்ற நகை கவரிங் நகை என்பது விசாரணையில் தெரியவந்தது. புழல் போலீசார் வழிப்பறி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபரை அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தேடி வருகின்றனர்.