சம்பளம் கேட்ட தொழிலாளி மீது பீர் பாட்டிலால் தாக்குதல் : நகை கடை உரிமையாளர் கைது.!

23 May 2020, 4:27 pm
Arrest -Updatenews360
Quick Share

கோவை: நகை கடையில் வேலை செய்ததற்க சம்பள பாக்கியை கேட்ட தொழிலாளி மீது பீர் பாட்டில் வைத்து தாக்கிய நகை கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பெரியகடை வீதி பகுதியில் வசித்து வருபவர் சசி கிருஷ்ணன.இவர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த அப்துல் ஹக்கீம் ( வயது 43) என்பவரது நகை கடையில் ஐந்து நாட்களில் மூன்று நாள் பணியாற்றி உள்ளார்.

இதற்கான சம்பள பணத்தை ஹரிகிருஷ்ணன் கேட்டபோது எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அவர் வீடு திரும்பி உள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு ஹரிகிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற அப்துல் ஹக்கீம் மற்றும் அவரது நண்பரான அப்துல் சலாம் ( வயது21) ஆகியோர் சென்றுள்ளனர்.

வேலைக்கு வரும்படி அப்துல் ஹக்கீம் கூறியுள்ளார். தனது சம்பள பணத்தை தருமாறு கேட்டதால் ஆத்திரமடைந்த அப்துல் ஹக்கீம் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கி உள்ளார்.உடன் இருந்த அப்துல் சலாம் பீர் பாட்டில் கொண்டு தாக்கி அவரை மிரட்டி உள்ளார்.இது குறித்து ஹரிகிருஷ்ணன் அளித்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த பெரியகடை வீதி போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.