அரசு ஊழியர்களுக்கு இடையிலான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி

17 March 2020, 8:51 pm
Krishnagiri Sports- updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர்களின் உடல் வலிமையை வலியுறுத்தி அரசு ஊழியர்களுக்கு இடையிலான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் ஏராளமான அரசு ஊழியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மாவட்ட அளவில் நடைப்பெற்ற இந்த விளையாட்டுப் போட்டியில் ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டிணம் என மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வரும் வருவாய் துறையினர், வேளாண்மை துறையினர், கல்வித்துறையில் பணிப்புரியும் ஆசிரியர்கள், தீயணைப்பு துறையினர்கள் என பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வரும்’ அரசு ஊழியர்கள் கலந்துக் கொண்டனர்.

மாவட்ட அளவில் நடைப்பெற்ற இந்த விளையாட்டுப் போட்டியில் கபடி, இறகு பந்து, டேபிள் டென்னிஸ், தடகளம், கை பந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் அரசு ஊழியர்களுக்கு இடையே நடைப்பெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு ஊழியர் களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அரசு ஊரியர்களின் மனவலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தினை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த விளையாட்டுப் போட்டியில் 200 க்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.