விவசாயின் உடலை சாலையில் வைத்து கிராமமக்கள் போராட்டம்…

14 May 2020, 5:05 pm
Quick Share

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே விவசாயின் கொலைக்கு காரணமான கொலையாளிகளை கைது செய்ய கோரி இறந்த விவசாயின் உடலை சாலையில் வைத்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரையடுத்த உத்தனப்பள்ளி காவல் நிலையஎல்லைக்கு உட்பட்ட, அலேசிப்பம் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவர் நேற்று இரவு அதே பகுதியில் மர்ம கும்பளால் படு பயங்கரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து உத்தனப்பள்ளி காவல் நிலைய போலிசார் முனிராஜியின் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வு செய்து. வழக்குபதிவு செய்து. உடலை அவரது குடும்த்தினரிடம் ஒப்படைத்தனர். இன்று கொலை செய்யப்ட்ட முனிராஜியின் உடலை சாலையில் வைத்து. கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி சலேசிப்பம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்ததில் போராட்டத்தை கைவிட்டனர்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்காதர் தெரிவிக்கையில், விவசாயின் கொலை சம்பந்தபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஒருவர். தலைமறைவாகி உள்ளார். கொலையில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். மேலும் ஓசூர், தளி தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் எல்லா பகுதிகளிலும், காவல்துறையினர் திவிரமாக கண்காணித்து கொலை குற்றங்கள் நடவாத வகையில் பணியாற்றிவருகிறோம். கொலை குற்றங்கள் பெருவாரியான வகையில் தடுப்பட்டுவருகிறது என தெரிவித்தார்.