விவசாயத்திற்கு இலவச மின்சாரம் நிறுத்தப்படாது… அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி…

23 May 2020, 7:52 pm
Quick Share

மதுரை: மதுரை முழுவதும் கொரோனா தொற்று பரவாமல் போராடிய ஊழியர்களையும், மாநகராட்சியையும் பாராட்டுவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

மதுரை பெத்தானியாபுரத்தில் கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சோலைராஜா ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியதாவது:-

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் இதுபோன்று கபசுர குடிநீர் வழங்குவது இரண்டாவது முறை. தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. என்றும் மதுரையில் 4 லட்சம் மக்கள் வாழ்கின்ற நிலையில், தற்போது ஒன்றரை லட்சம் பேருக்கு கபசுரக் குடிநீர் வழங்கி உள்ளோம்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்க வந்த மக்கள் இறுக்கமான சூழ்நிலையில் இருந்தால்தான் சென்னையில் அதிகமான வைரஸ் பரவல் ஏற்பட்டுவிட்டது. இதுபோன்று மதுரையின் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மதுரையில் இந்த கொரோனா தொற்று பரவாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. மதுரை மாநகராட்சியை பாராட்டுகிறோன். தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவது நிறுத்தப்படது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு விவசாயி. அவர் ஒருபோதும் விவசாயிகளுக்கு எதிராக விவசாயிகள் பாதிக்கின்ற வகையில் நடவடிக்கை எடுக்க மாட்டார். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதற்கான நடவடிக்கையை முதல்வர் எடுப்பார். அதிமுக சார்பில் மதுரை மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.