கொரோனா காலத்தில் பணி வழங்க வேண்டும்.! காவலர்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மனு.!!

27 July 2020, 4:11 pm
Villupuram Training Police Petition - Updatenews360
Quick Share

விழுப்புரம் : காவல்துறை பணியில் குறைந்த மதிப்பெண்களில் தகுதியை இழந்தவர்களுக்கு கொரோனா காலத்தில் பணி வழங்க வேண்டுமென்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 2019ஆம் ஆண்டு 20 ஆயிரம் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் முன்னுரிமை பெற்ற 8888 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் மீதி உள்ள 11 ஆயிரம் காவலர்கள் பணி கிடைக்காமல் திரும்பினர்.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பத்தாயிரம் காவலர்கள் தேர்வு செய்யப்படும் என்று அறிக்கை வெளியிடப்பட்டது இதனடிப்படையில் கொரோனா நோய் தொற்று காலத்தில் தேர்வு நடை பெறுவதற்கு காலதாமதம் ஆவதால் ஏற்கனவே குறைந்த மதிப்பெண்களில் தகுதி இழந்த காவலர்களுக்கு பணியை வழங்க வேண்டுமென்று தேர்ச்சி பெறாத காவல் பயிற்சி பெற்றவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்