மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை… அமைச்சர் அறிவிப்பு…

23 May 2020, 9:05 pm
Erode sengottayan - Updatenews360
Quick Share

ஈரோடு: பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்து முடிவுகள் வெளியான பிறகே அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் நடைபெற வேண்டும் அதற்கு முன்பாக தனியார் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அயலூர் அளுக்குளி கலிங்கியம் ஆகிய பஞ்சாயத்துகளில் ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும் சாக்கடை மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆழ்துளைகிணறு அமைக்கும் பணியை கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:- பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பிறகே அனைத்து பள்ளிகளிலும் மாணவர்க்கை நடைபெற வேண்டும். அதற்கு முன்பாக தனியார் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் பணிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் செல்ல மறுப்பதால் விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் முன்பே தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தகுந்த ஆதாராத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.