குளத்தில் நண்பர்களுடன் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

15 February 2020, 5:04 pm
Thiruvallur Death- updatenews360
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே குளத்தில் நண்பர்களுடன் குளித்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டு வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் கிராமத்தில் உள்ள தாமரை குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது மூச்சு திணறி காக்கலூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்ற வாலிபர் நீரில் மூழ்கினார். உடனடியாக இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் அவருடைய உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.