ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் நடமாடிய 1,289பேர் கைது…

27 March 2020, 11:43 am
Quick Share

திருச்சி: ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் நடமாடிய1,289 பேரை போலீசார் கைது செய்தும், 802 ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், 22 நான்கு வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

கொரானாவில் இருந்து காத்துக்கொள்ள யாரும் வீட்டிற்கு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு பிறபிக்கப்படுவததாக அறிவித்துள்ளார். பல இடங்களிலும் காரணமின்றி சுற்றிதிரிந்த நபர்கள் திருப்பி அனுபப்பட்டனர். சில இடங்களில் ‘தட்டி’ அனுப்பப்பட்டனர். எனினும் நண்பர்களாக சேர்ந்து கொண்டு சுற்றித்திரிந்த நபர்களை கைது செய்த போலீசார் சில இடங்களில் வாகனங்களை பறிமுதல் செய்தினர்.

அந்த வகையில் திருச்சி, தஞ்சை, நாகை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த மத்தியமண்டலத்தில் ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் அவசியமின்றி சாலைகளில் நடமாடிய 1289 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 802 ஆட்டோக்கள் மற்றும் டூவீலர் வாகனங்கள் மற்றும் 22 நான்கு சக்கர வாகனங்கல பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.