ரஜினிகாந்த் SUPER STAR மட்டுமல்ல… SUPER TAX PAYER : பாராட்டிய ஆளுநர்…. ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2022, 1:54 pm
Rajini - Updatenews360
Quick Share

தமிழ்நாடு புதுச்சேரி மண்டலத்தில் அதிக வருமான வரி செலுத்திய நபர் ரஜினிகாந்த் என வருமான வரித்துறை விருது வழங்கி உள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக நம்பர் 1 இடத்தை தக்க வைத்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு வானளவு உயர்ந்து கொண்டே போகிறது.

இவர்தான் தமிழ் சினிமாவில் தற்போது அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர் என்று கூறப்படுகிறது. அதனை மெய்யாக்கும் விதமாக தற்போது வருமான வரித்துறை கடந்த வருடம் அதிகமாக வருமான வரி செலுத்திய நபர்களில் தமிழகத்தில் முதலிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்று விருது வழங்கியுள்ளது.

வருமானவரித்துறை தினமான இன்று அந்த விழா நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். இந்த விருதினை ரஜினிகாந்த் சார்பாக அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெற்று கொண்டார்.

Views: - 2362

0

0