நில தகராறில் இளம் பெண்ணை கொடூரமாக தாக்கிய உறவினர்கள் : இணையத்தில் வைரலாகும் வீடியோ

Author: kavin kumar
10 February 2022, 4:25 pm
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரியில் நில தகராறில் இளம் பெண்ணை அவரது உறவினர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி பாகூர் தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (50). இவர் தனது மகன் பிரியதர்ஷன், மகள் பிரியதர்ஷினி உடன் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்கள் செல்வி-சுப்ரமனி தம்பதியினர், ஆதிலட்சுமியின் உறவினர்கள், இந்த இரு குடும்பத்தினருக்கு இடையே வீட்டு மனை பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆதிலட்சுமியின் மகன் நேற்று காலை வீட்டின் அருகே இருக்கும் இரு குடும்பத்திற்கும் சொந்தமான காலி மனையை செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை
கண்ட செல்வி மற்றும் அவரது கணவர் சுப்ரமணி ஆதிலட்சுமியின் மகனை ஆபாசமாக திட்டியுள்ளனர்.

பதிலுக்கு ஆதிலட்சுமியும் அவரது மகளும் சுப்ரமணி தம்பதியினரை திட்டியாதக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த தம்பதியினர் தாய் ஆதிலட்சுமி மற்றும் மகள் பிரியதர்ஷினியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போஃனில் வீடியோ எடுத்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 717

0

0