சாலையோரம் நடிகை ‘ஷகிலா’ பங்கேற்ற சினிமா ஷூட்டிங் : ஆம்புலன்சை நிறுத்தி ரசித்து பார்த்த ஓட்டுநர்.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2022, 10:00 pm
Sakila Shooting - Updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி : சாலையோரம் நடிகை ஷகிலா பங்கேற்கும் சினிமா பட ஷீட்டிங் நடைபெற்ற நிலையில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சற்று நேரம் வாகனத்தை நிறுத்தி நடிகையை ரசித்து சென்றது முகம் சுழிக்க வைத்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் மக்கள் அதிகம் கூடும் பகுதியான மந்தைவெளியில் ” ஐஸ் பிரியாணி ” என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் கவர்ச்சி நடிகை ஷகிலா நடிக்கும் காட்சி எடுக்கப்பட்டு வந்தது.

இதைக்கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் குவிந்ததால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது. மேலும் படப்பிடிப்பு நடைபெற்ற போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒட்டுனர் ரோட்டுக்கடையில் ஷீட்டிங்-கில் இருந்த ஷகிலா பார்க்கும் ஆர்வத்தில் சற்று நேரம் நிறுத்தி பின்னர் ஆமைவேகத்தில் அங்கு இருந்து கடந்து சென்றார்.

நோய் தொற்று பரவி வரும் இது போன்று மக்கள் அதிகம் கூடும் இடத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடப்பதால் அவ்விடத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குவிக்கின்றனர் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும், இதனால் சாலையோர சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

Views: - 587

0

0