பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை: அதிர்ச்சி சிசிடிவி வீடியோ…பொள்ளாச்சியில் துணிகரம்..!!

Author: Rajesh
26 April 2022, 10:11 am
Quick Share

கோவை: பொள்ளாச்சியில் ஹோட்டல் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பொள்ளாச்சி அருகே உள்ள மன்னுரை சேர்ந்த விவசாயி ஈஸ்வர சாமி. இவர் பொள்ளாச்சியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் விவசாயக் கடன் வாங்கியுள்ளார்.

இன்று தனது உறவினருடன் காரில் பஞ்சாப் நேஷனல் வங்கி சென்று கடன் தொகையை செலுத்திவிட்டு மீண்டும் பணம் பெற்றுக் கொண்டு பொள்ளாச்சி கோவை ரோட்டில் இல்ல அமுதசுரபி ஹோட்டலில் உணவருந்த செல்லும் முன் காரை பார்க்கிங் செய்துள்ளனர்.

இருவரும் அமுதசுரபி சென்று உணவு அருந்தி விட்டு திரும்பி வந்து பார்க்கும்போது காரின் கண்ணாடி மர்மநபர்களால் உடைக்கப்பட்டு காரில் இருந்த மூன்று லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதையடுத்து ஈஸ்வர சுவாமி மகாலிங்கபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி உத்தரவின் படி ஆய்வாளர் ராமதாஸ் தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை போனது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 678

0

0