நாக சைதன்யாவுக்கு மீண்டும் திருமணம் குறித்து வந்த தகவல்.. கடும் கோபத்தில் சமந்தா போட்டிருக்கும் ட்விட் வைரல்.!

Author: Rajesh
21 June 2022, 11:53 am
samantha - updatenews360-1
Quick Share

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த நாக சைதன்யா, சமந்தா நான்கு வருட திருமண வாழ்க்கைக்குப் பின்னர் ஒரு வருடத்திற்கு முன்பு தங்கள் விவகாரத்தை அறிவித்தனர். தற்போது இருவரும் படங்களின் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தனது முன்னாள் மனைவியை பிரிந்து ஒரு வருடம் கழித்து நாக சைதன்யாவுக்கு மீண்டும் காதலில் விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் நாக சைதன்யா கடந்த சில வாரங்களாக நடிகை சோபிதா துலிபாலாவை டேட்டிங் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இருவரும் சமீபத்தில் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள சைதன்யாவின் புதிய வீட்டில் ஒன்றாகக் காணப்பதாகவும் அங்கு இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேஜர் படத்தின் படப்பிடிப்பின் போது இருவரும் ஒட்டலில் பலமுறை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது தெலுங்கு வட்டாரத்தில் இந்த செய்தி சென்சேஷன்ல் ஆக பேசப்பட்டு வருகிறது. ஆனால் நாக சைத்தன்யா ரசிகர்கள் இது சமந்தா குழு செய்த வேலை என பதிவு போட அதற்கு சமந்தா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், பெண்ணை பற்றி விஷயம் என்றால் அது உண்மை, ஆண் பற்றி வந்தால் அந்த பெண் தான் இப்படி ஒரு தகவல் பரப்புகிறார் என்பதா, கொஞ்சம் வளருங்கள். இதில் சம்பந்தப்பட்ட இருவரும் தங்களது வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

உங்களது வேலையை கவனியுங்கள், குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என பதிவு செய்துள்ளார்.

Views: - 546

1

0