என்ன சமந்தா இதெல்லாம்..! முகம் சுழிக்க வைத்த டி-சர்ட் புகைப்படம்..!

Author: Rajesh
2 February 2022, 1:54 pm
Quick Share

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்ததற்கு பிறகு, கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். தற்போது, நடிகர் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் பட்தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு வருகிறது. அந்த அளவிற்கு கவர்ச்சி குத்தாட்டம் ஆடியிருந்தார்.
இதனிடையே வெளிநாடுகளுக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்று தனது நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் பொது வெளியில் நடந்து வரும் போட்டோ ஒன்று வைரலாகியுள்ளது. டி-சர்ட் அணிந்து, முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு போன் பேசியபடி வருகிறார். அருவருப்பான வார்த்தைகள் இடம் பெற்றுள்ள டி-ஷர்ட்டை சமந்தா அணிந்திருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 920

1

1