ரயிலில் கடத்த முயன்ற மதுபாட்டில்கள் பறிமுதல் : ரயில்வே போலீசார் விசாரணை

Author: kavin kumar
13 February 2022, 4:15 pm
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் இருந்து ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய மரம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயனிகள் ரயில் ஒன்று புறப்பட்டது, ரயில்கள் புறப்படும் போதும் புறப்பட்ட பின்னரும் ரயில்வே போலீசார் கண்காணிப்பில் ஈடுப்படுவது வழக்கம், அது போல் ரயில்வே போலிசார் இன்று கண்காணிப்பில் ஈடுப்பட்ட போது, நடைமேடையில் உள்ள சிமெண்ட் கடையின் கீழ் மூன்று பைகள் இருப்பதை கண்ட அவர்கள் அதனை பறிமுதல் செய்து சோதனை செய்ததில் அந்த 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிளான 314 மதுபான பாட்டில்கள் இருந்தது. இதனை அடுத்து மது கடத்தல் வழக்கு பதிவு செய்த போலிசார் யார் மது கடத்தலில் ஈடுப்பட முயன்றனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 763

0

0