ப்பா என்ன மனுஷன்யா… ஷாருக் கானுடன் கைக்கோர்த்த விஜய்..! அசந்து போன ரசிகர்கள்..!

Author: Vignesh
27 September 2022, 3:44 pm
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக பார்க்கப்படுபவர் இயக்குநர் அட்லீ, இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

அப்படியான அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ஷாருக் கானுடன் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

மேலும், சமீபத்தில் அட்லீயின் பிறந்தநாளை ஜவான் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடினர். அப்போது சர்ப்ரைஸாக அந்த பார்ட்டியில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஜவான் திரைப்படம் ஷாருக் கானின் தயாரிப்பு என்பதால் அப்படத்தில் விஜய்யை நடிக்க வைக்கும் எண்ணத்தில் ஷாருக் கானும் இருந்துள்ளார். அந்த பார்ட்டியில் அவரே விஜய்யை படத்தில் நடிக்க இன்வைட் செய்ய, விஜய்யும் சம்மதித்ததாகச் சொல்லப்படுகிறது.

விஜய்யும் இப்படத்திற்கு ஒரு வாரம் கால்ஷீட் கொடுத்துள்ளாராம், விஜய்யின் வசதியை கருத்தில் கொண்டு சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

Views: - 325

0

0