100வது போட்டியில் 100… கடைசி 2 ஓவரில் மாறியது வெற்றி : மேக்ஸ்வெல் அபார சதம்.. வாரி வழங்கிய பிரசித் கிருஷ்ணா!

Author: Udayachandran RadhaKrishnan
29 November 2023, 8:46 am
Maxwell -Updatenews360
Quick Share

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கவுகாத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 6 ரன்களும், இசான் கிஷன் டக் அவுட்டும் வெளியேறினர். தினத்தில் சூரியகுமார் யாதவும் அபாரமாக விளையாடும் 39 ரன்கள் சேர்த்தார்.
எனினும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் விளையாடிய ருதுராஜ் ஆஸ்திரேலிய பந்துவீச்சை பிரித்து மேய்ந்தார்.

இதன் மூலம் அவர் 57 பந்துகளில் 123 ரன்கள் சேர்த்தார். இதில் 13 பவுண்டர்களும் ஏழு சிக்ஸர்களும் அடங்கும். மேக்ஸ்வெல் வீசிய கடைசி ஓவரில் மட்டும் ருதுராஜ் 30 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது. 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

இதில் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடி 8 பவுண்டர்களை விளாசி 18 பந்துகளின் 35 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் ஆரோன் ஹார்டில் 16 ரன்களும் ஜாஸ் இங்கிலீஷ் 10 ரன்களும் எடுத்து வெளியேறினார்.

மார்கஸ் ஸ்டோனிஸ் 17 ரன்களும் டிம் டேவிட் டக் அவுட் ஆகியும் வெளியேற ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஒரு கட்டத்தில் இந்தியாவின் வெற்றி உறுதி என ரசிகர்கள் நம்பிய நிலையில் மேக்ஸ்வெல் மற்றும் மேத்தீவ் வெட் ஜோடி அபாரமாக விளையாடி இந்தியாவின் கனவை கலைத்தது.

இதில் மேக்ஸ்வெல் தனது ஓவரில் 30 ரன்கள் போனதற்கு பரிகாரம் தேடும் விதமாக பேட்டிங்கில் பட்டையை கிளப்பினார். கடைசி இரண்டு ஓவரில் 43 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 19-வது ஓவரை அக்சர் பட்டேல் வீச அதில் ஆஸ்திரேலியா மூன்று பவுண்டரி ஒரு சிக்ஸர் என 22 ரன்கள் விளாசினர்.

இதனை அடுத்து கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பிரசித் கிருஷ்ணா வாரி வழங்கும் வள்ளலாக மேக்ஸ்வெலுக்கு அல்வா பந்துகளை வீசினார்.

ஒரு யாக்கர் கூட அவர் வீசாமல் இருந்தது ரசிகர்களையே கோபமடைய செய்தது. நன்றாக ஷார்ட் பால் வீசி அடிப்பதற்கு ஏதுவாக பந்து வீசியும் தாராள மனது காட்டினார்.

இதனால் ஆஸ்திரேலியா அணி அந்த ஓவரில் நான்கு பவுண்டரி ஒரு சிக்சர் என 23 ரன்கள் விளாசி வெற்றி பெற்றது. இதன் மூலம் மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 104 ரன்கள் விளாசினார்.

இதில் 8 பவுண்டர்களும் 8 சிக்ஸர்களும் அடங்கும். ஓவர் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் இந்திய அணி கடைசி ஓவரில் நான்கு பில்டர்களை மட்டும் பவுண்டரில் நிறுத்தியதும் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

Views: - 649

0

0