ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி? ஆஸிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் தமிழக வீரருக்கு வாய்ப்பு!!

2 December 2020, 10:05 am
3RD ODI - Updatenews360
Quick Share

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டி20 போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளில் ஆஸி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடக்கிறது. ஆறுதல் வெற்றியை நோக்கி இந்திய அணி இந்த போட்டியை விளையாடி வரகிறது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஆஸி அணியை பந்து வீச பணித்தார். இதையடுத்து முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 61 ரன்கள் எடுத்து விளையாடிக வருகிறது.

T Natarajan to shave off his beard after the birth of his daughter

முதலில் களமிறங்கிய தவான் 27 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். இதையடுத்து கில் மற்றும் விராட் கோலி பொறுப்புடன் ஆடி வருகின்றனர். இன்றைய போட்டியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளதால் அவரின் ஆட்டத்திற்கு இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
முகமது சமிக்கு இந்த போட்டியில் ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 33

0

0