RCBக்கு நேரமே சரியில்ல… கடைசி வரை போராட்டம் : 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற KKR..!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2024, 8:22 pm
rcb
Quick Share

RCBக்கு நேரமே சரியில்ல… கடைசி வரை போராட்டம் : 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற KKR..!!

நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 36-வது போட்டியில் கொல்கத்தா அணியும், பெங்களூர் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் இன்று மதிய போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் அதிரடி காட்ட தொடங்கினர்.

அதிலும் குறிப்பாக ஃபில் சால்ட் மிகவும் அதிரடி காட்டினார், அவர் வெறும் 14 பந்துக்கு 49 ரன்கள் எடுத்து சிராஜ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதிரடி காட்டுவர் என எதிர்ப்பார்க்கப்பட்ட சுனில் நரேன் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி ஒரு கட்டத்தில் 97-4 என்று தடுமாறி வந்தது.

அதன் பின் ஜோடி சேர்ந்த ஷ்ரேயஷ் ஐயரும், ரிங்கு சிங்கும் பொறுமையாக அணியின் ஸ்கோரை உயரத்தினர். இதனால் சரிவிலிருந்து கொல்கத்தா அணி மீண்டது. மேலும், இந்த ஜோடி 40 ரன்களை சேர்த்தனர். இறுதியில் ரஸ்ஸல், ரமன்தீப் சிங் இருவரின் சிறிய அதிரடி காரணமாக 20 ஓவருக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தனர்.

இதனால் 223 என்ற இமாலய இலக்கை நோக்கி பெங்களுரு அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான கோலியும், டூ பிளெஸ்ஸியும் சரிவர ஆடாமல் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர். ஆனால் அதன் பிறகு ஜோடி சேர்ந்த வில் ஜாக்ஸ்சும், ரஜத் பட்டிததரும் கொல்கத்தா அணியின் பவுலர்களை சிதறிடத்தனர்.

இருவரின் அட்டகாசமான அதிரடியால் மிகவும் விரைவாக அரை சதம் கடந்து விளையாடினர். ஆனால் திடிரென ரஸ்ஸலின் அட்டகாசமான பந்து வீச்சால் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால் ஆட்டத்தில் மீண்டும் கொல்கத்தா அணி கை ஓங்கியது. அதன் பிறகு வழக்கம் போல தினேஷ் கார்த்திக் தனி ஆளாக நின்று போராடினர்.

அவருடன் ஒத்துழைத்து விளையாடிய பிரபுதேசாய் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் 19-வது ஓவரின் கடைசி அதில் பெங்களூரு அணியின் நம்பிக்கையான தினேஷ் கார்த்திக்கும் ரஸ்ஸல் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் பெங்களூரு அணியின் வெற்றி இதிலே முடிந்தது என்று நினைக்கும் பொழுது கர்ரன் சர்மா திடீரென சிக்ஸர்கள் அடிக்க ஆரம்பித்தார்.

இதனால் கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 1 ரன்கள் மட்டுமே பெங்களூரு அணி எடுத்தது. இதனால் 1 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றியை ருசித்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி இந்த தொடரில் 10 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் மீண்டும் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினர்.

Views: - 224

0

0